Description
Buy Atomic Habits (Tamil) 2nd hand books online, Authored by james clear, Manjul from Used Book Store.
உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க, பிரம்மாண்டமான சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால், பழக்கவழக்கங்கள் குறித்த ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம் உலகப் புகழ்பெற்ற நிபுணராகத் திகழும் ஜேம்ஸ் கிளியர், அதற்கு ஒரு மாற்று வழியை முன்வைக்கிறார். தினமும் காலை ஐந்து நிமிடங்கள் முன்னதாக எழுவது, பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டம் மேற்கொள்வது, அல்லது ஒரு பக்கம் கூடுதலாகப் படிப்பது போன்ற எண்ணற்ற சிறிய பழக்கவழக்கங்களின் ஒருங்கிணைந்த விளைவுகளிலிருந்துதான் உண்மையான மாற்றம் பிறக்கிறது என்று அவர் வாதிடுகிறார். இந்தச் சிறு மாற்றங்கள் எவ்வாறு உங்கள் வாழ்க்கையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஜேம்ஸ் கிளியர் இந்தப் புத்தகத்தில் தெளிவாக விளக்குகிறார். இதற்கு அறிவியல்பூர்வமான விளக்கங்களையும் அவர் அளிக்கிறார். ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்கள், தலைசிறந்த நிறுவனத் தலைவர்கள், மற்றும் புகழ்பெற்ற அறிவியலறிஞர்களின் உத்வேகம் தரும் கதைகளைப் பயன்படுத்தி, தனது கோட்பாடுகளை அவர் சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறார். இந்தச் சிறிய மாற்றங்கள் உங்கள் தொழில், உறவுகள், மற்றும் தனிப்பட்ட வாழ்வில் பெரும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, அவற்றை முழுமையாக மேம்படுத்தும் என்பது உறுதி.
9388241908 ISBN-10
9789388241908 ISBN







Reviews
There are no reviews yet.